பதுளை - நாரங்கல மலைப்பகுதியில் நேற்றிரவு (26) காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நாரங்கல மலை பகுதியில் முகாமிட்டிருந்த நிலையிலேயே குறித்த 22 வயதுடைய இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இராணுவத்தினர், காவல்துறையினரின் கூட்டு நடவடிக்கையில், மலையின் பள்ளத்தாக்கிலிருந்து இன்று பகல் குறித்த இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
அவிசாவளை - மானியம பகுதியைச் சேர்ந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர், நேற்றைய நாளில் 06 நண்பர்களுடன் நாரங்கல மலைப் பகுதியில் இரவு நேரத்தில் அவர்கள் அங்கு முகாமிட்டு தங்கியுள்ளதாகவும், அங்கிருந்து வெளியே சென்ற குறித்த இளைஞன், காணாமல் போயிருந்த நிலையில், இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.