கொரோனா சடலங்களை அடக்கும் விவகாரம்; பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்துக்கும் எழுந்துள்ள சிக்கல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா சடலங்களை அடக்கும் விவகாரம்; பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்துக்கும் எழுந்துள்ள சிக்கல்!

பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன

கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதியளித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ள போதிலும், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் வழிகாட்டல் ஆலோசனைகள் வெளியாகும்வரை அந்தத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் காணப்படும் என்று இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.


இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், 


இதுவரையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழப்பவர்களின் சடலங்கள் 800 – 1200 செல்சியஸ் வெப்ப நிலையில் தகனம் செய்யப்பட்டது. தற்போது சடலங்களை அடக்கம் செய்வதற்கான அனுமதியும் கிடைத்துள்ளது. 


எனவே, தற்போது தகனம் மற்றும் அடக்கம் ஆகிய இரண்டுக்கும் சட்டபூர்வமாக அனுமதியளிக்கப்பட்டுள்ளது.


புதிய வர்த்தமானி அறிவித்தலுக்கு ஏற்ப உரிய அதிகாரிகளால் பரிந்துரைக்கப்படும் நிலங்களிலேயே சடலங்களை அடக்கம் செய்ய முடியும். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் இதற்கான ஆலோசனை வழிகாட்டல்கள் வெளியிடப்படும்வரை, சடலங்களை அடக்கம் செய்வதற்கான இடத்தை தேர்ந்தெடுத்து கூறுவதிலும் இந்தத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதிலும் சிக்கல் காணப்படுகின்றன.


சடலங்கள் வைக்கப்பட்டுள்ள பெட்டியை திறக்க முடியுமா? எந்தளவு ஆழத்தில் சடலம் அடக்கம் செய்யப்பட வேண்டும்? உள்ளிட்ட விடயங்களையும் உள்ளடக்கியதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிக்கை வெளியிடப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 


$ads={1}


அத்தோடு இதுவரையில் உபயோகிக்கப்படுகின்ற நிலங்களிலேயே கொரோனா சடலங்களை அடக்கம் செய்ய முடியுமா? அல்லது அவற்றுக்காக வேறு இடம் ஒதுக்கப்பட வேண்டுமா? என்பவை தொடர்பிலும் தெரிவிக்கப்பட வேண்டும் என்றார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.