அந்த சந்திப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி என முக்கிய கட்சிகளின் முக்கிய முஸ்லிம் எம்.பிக்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
அந்த சந்திப்பின் போது கொரோனா காரணங்களை முன்னிறுத்தி, ஜனாஸா எரிக்கப்படும் விடயத்தை பாகிஸ்தானிய பிரதமர் இம்ரான் கானுக்கு அந்த சந்திப்பில் கலந்து கொண்டிருந்த முஸ்லிம் எம்.பிக்கள் எத்திவைத்து தீர்வொன்றை பெற்றுத்தருமாறு கோரிக்கையை முன்வைக்க, அந்த கோரிக்கைக்கு பதிலளித்த பாகிஸ்தானிய பிரதமர் இம்ரான் கான், தான் இந்த விடயம் தொடர்பில் ஏற்கனவே ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் கலந்துரையாடிவிட்டதாகவும் சாதகமான நல்ல முடிவு விரைவில் அறிவிக்கப்படும் என்றும் உறுதியாக தெரிவித்தார்.
அது மாத்திரமின்றி இலங்கையில் 10 வீதமளவில் வாழும் முஸ்லிங்களாகிய நாங்கள் நிதானத்துடன் அரசியல் தீர்மானங்களை எடுக்கவேண்டும். பௌத்த மக்களுடனும் இந்த நாட்டை ஆளும் அரசாங்கத்துடனும் முரண்பாடுகளை ஏற்பாடுத்தாது அரசியல் தீர்மானங்களை எடுக்கவேண்டும். நாங்கள் இணைக்க அரசியலை முன்னெடுப்பதே சிறந்த வழி.
உலகளாவிய ரீதியாக முஸ்லிங்களை பலவீனப்படுத்த பல அமைப்புக்கள் திட்டம் தீட்டிக்கொண்டு செயற்பட்டுவருகிறது. குறிப்பாக இந்தியாவில் வாழும் முஸ்லிங்களை இலக்கு வைத்து இந்திய அரசாங்கம் பல இன ஒழிப்பு சட்டங்களை கொண்டுவந்துள்ளது. அவ்வாறான சூழ்நிலைக்கு இலங்கையில் வாழும் முஸ்லிங்களை இலங்கை முஸ்லிம் அரசியல்தலைவர்கள் தள்ளிவிடக்கூடாது. பெரும்பான்மை மக்களுடன் சேர்ந்து வாழும் வழிவகைகளை உருவாக்கிக்கொள்ளுங்கள் என்று அங்கு கலந்துகொண்டிருந்த சகல முஸ்லிம் எம்.பிக்களுக்கும் ஆலோசனையாக முன்வைத்தார்.
அது மாத்திரமின்றி நமது முஸ்லிம் கட்சிகள் இரண்டும் இதுவரை செய்த பிழையான முன்னெடுப்புக்கள் சகலதுக்கும், அவருடைய ஆலோசனைகள் ஒருவித தெளிவை வழங்கியிருந்தது என்று அங்கு கலந்து கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தெரிவித்தனர்.