நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதில் மக்கள் தொடர்ந்து பொறுமையாகவும் பொறுப்பாகவும் இருக்க வேண்டும் என்று இலங்கை பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
பொதுச் சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசுரிய இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளார்.
மேலும், மக்கள் தொடர்ந்து தேவையற்ற பயணத்தைத் தவிர்க்க வேண்டும் என்றும் கூறினார்.
வார இறுதி நீண்ட விடுமுறை காரணமாக அதிகளவான மக்கள் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுலா மற்றும் யாத்திரைகளில் ஈடுபட்டுள்ளனர்.
முந்தைய காலத்துடன் ஒப்பிடும்போது ஏராளமான சுற்றுலாப் பயணிகள் நேற்று மாத்தளை - ரிவர்ஸ்டன் பகுதிக்கு வந்துள்ளனர்.
$ads={1}
இதுபோன்று சுற்றுலா மற்றும் யாத்திரைகளுக்குச் சென்றவர்களில் பலர் சுகாதார பரிந்துரைகளுக்கு ஏற்ப செயல்பட்டாலும், சிலர் சுகாதார பரிந்துரைகளை புறக்கணிப்பதாகக் கண்டறியப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.
எனவே, வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதில் மக்கள் தொடர்ந்து பொறுமையாகவும் பொறுப்பாகவும் இருக்க வேண்டும் என்று கடுமையாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.