ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்னவின் மகனான சட்டத்துறை மாணவன் மிகார குணரத்னவே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.
சுமார் 10 பொலிஸார் தன்னை தாக்கியதாக அவர் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்னவின் மூத்த மகனான சட்டத்தரணி சரித்த மைத்திரி குணரத்ன ஒரு குறிப்பை வெளியிட்டுள்ளார்.
அதில்-
23ஆம் திகதி எனது மூத்த சட்டத்தரணியால் பேலியகொட பொலிஸ் நிலையத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது. சிறப்பு குற்றப்பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒரு சந்தேகநபர் தொடர்பில் என்னை முன்னிலையாக அறிவிக்கப்பட்டது.
நான் சிறப்பு குற்றப்பிரிவிற்கு சென்ற போது சாதாரண உடையணிந்த ஒருவர் எனது வாடிக்கையாளரை மிரட்டுவதை கண்டேன்.
நான் உடனடியாக உள்ளே நுழைந்து, பொலிஸ் அதிகாரி என்று நான் நம்பிய அந்த சிவில் உடை நபரிடம், இவர் எனது வாடிக்கையாளர் என்றும், ஒரு சட்டத்தரணியாக அவரை பிரதிநிதித்துவப்படுத்த நான் இங்கு வந்துள்ளேன் என ஆவணங்களை உறுதிப்படுத்த அடையாள அட்டையை காண்பித்தேன். அவர் எனது ஆவணங்களை பார்க்காமல் விலகிச் சென்றார்.
பொலிஸ் அதிகாரிகளால் பலமுறை தாக்கப்பட்டதாகவும், தான் தொடர்புபடாத போதைப்பொருள் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாகவும், காவல்துறையினர் சொல்வதை ஏற்காவிட்டால் சிறையில் அடைக்கப்படுவேன் என்றும் அவர்கள் அச்சுறுத்தியுள்ளதாகவும் எனது வாடிக்கையாளரால் எனக்குத் தெரிவிக்கப்பட்டது.
நான் திரும்பி வந்தபோது சாதாரண உடையில் இருந்த நபர், எனது வாடிக்கையாளரை அச்சுறுத்தியது தொடர்பில் கேட்டேன்,
அவரது சாதாரண உடையில் இருந்ததால், இந்த நபர் எந்த பதவியில் இருக்கிறார் என்பதை என்னால் ஊகிக்க முடியாது. அதனால் அவரை சார்ஜென்ட் என்று அழைத்தேன். அவருக்கு கோபம் வந்து விட்டது. கெட்ட வார்த்தைகளால் திட்டினார்.
லிண்டன் சில்வா என்ற பெயருடைய பொலிஸ் தலைமை ஆய்வாளரும் அவருடன் இணைந்து என்னை மிரட்டினார். எனது அடையாளத்தை நிரூபிக்க கேட்டார். சட்டத்தரணி அடையாள அட்டையை கொடுத்தேன். அதை குறிப்பு புத்தகத்தில் எழுதினார்.
கடமையைச் செய்யும்போது சாதாரண உடையில் அணிந்த ஒரு நபரிடம் சார்ஜென்ட் என்று உரையாற்றுவதைத் தவிர வேறு வழியில்லை என்று நான் இன்ஸ்பெக்டரிடம் வெறுமனே கூறினேன்.
பின்னர் இன்ஸ்பெக்டர் என்னை குடிபோதையில் இருப்பதாக குற்றம் சாட்டினார். எனது கண்ணியத்தை மட்டுமல்ல, எனது உன்னதமான தொழில் தர்மத்தையும் பாதுகாக்க வேண்டுமென்பதால், நான் குடிபோதையில் இருக்கிறேனா என்று சரிபார்க்க உடனடியாக என்னை ஒருசோதனைக்கு உட்படுத்துமாறு அதிகாரிகளுக்கு சவால் விடுத்தேன்.
நான் அதிகாரிகளின் பெயரைக் கேட்டபோது அவர்கள் என்னை மிரட்டினர். என்னை வெளியேறச் சொன்னார்கள்.
நான் வெளியேறி தொடர்புடைய பொலிஸ் துறை, சட்டத்தரணிகள் சங்கத்திற்கு முறையிட்டேன்.
பொலிஸ் நிலையத்திற்கு மீண்டும் செல்வது எனக்கு தீங்கு விளைவிக்கலாமென எனது வாடிக்கையாளர் கருதியதால், அவருக்கு இரவு உணவைக் கொடுக்குமாறு நேற்று (25) இரவு எனது தம்பி மிகரவிடம் (இலங்கை சட்டக் கல்லூரியில் 3 ஆம் ஆண்டு மாணவர்) கேட்டேன்.
இன்று எனது சகோதரர் எனது வாடிக்கையாளருக்காக இரவு உணவை ஒப்படைக்கச் சென்றபோது குறைந்தது பத்து பொலிஸ் அதிகாரிகளால் கொடூரமாக தாக்கப்பட்டார்.
பொலிசார் அவரது அடையாளத்தை தவறாகப் புரிந்து கொண்டதாகவும், அது நான்தான் என்ற அனுமானத்தின் கீழ் அவரை கொடூரமாக தாக்கியதாகவும் கருதப்படுகிறது.
எங்கள் தந்தை மைத்ரி குணரத்னனின் மகன் என்று அவர் குறிப்பிட்டபின்னர் அவர்கள் மிகர குணரத்னவை அடிப்பதை நிறுத்திவிட்டார்கள்,
அப்போது போதைப்பொருள் தொடர்பான குற்றத்தில் அவரை சந்தேக நபராக ஆக்குவதாக அவர்கள் மேலும் மிரட்டியுள்ளனர் என பதிவிட்டுள்ளார்.