இலங்கை இராணுவத்தினரின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் இருந்து அவர்களை விடுவிப்பதற்காக ஜெனீவாவில் அரசாங்கம் முன்னிற்கும் என கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
வில்கமுவ - ஹிம்பிலியாகட பிரதேசத்தில் இன்று (21) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், ஜெனீவாவின் நிகழ்ச்சி நிரலில் இலங்கை உள்ளடக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
நாட்டின் முப்படையினர் பொதுமக்களை அச்சுறுத்துவதாகவும், அவர்களினால் மனித உரிமைகள் மீறப்படுவதாகவும், குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
$ads={1}
எனினும், முப்பது ஆண்டுகால யுத்தத்தை சக்திமிக்க தலைவர் ஒருவரின் தலைமையில் நிறைவு செய்ய முடிந்ததாகவும், மனிதாபிமான நடவடிக்கைகளில் தொடர்ச்சியாக இராணுவத்தினரே ஈடுபட்டு வருவதாகவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆகவே, இராணுவத்திரை, அவர்கள் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்க தேவையான நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், மக்களின் அனைத்து விதமான தேவைகளுக்கும் இராணுவத்தினர் துணை நிற்பதாகவும், கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.