கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உட்பட சுமார் 1,500 பேருக்கு இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி விமான நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ள இலங்கை இராணுவத்தினர், விமானப்படை, பொலிஸார், குற்றப் புலனாய்வுத்துறை, குடிவரவு மற்றும் குடியகல்வு துறையினர், சுங்கப் பிரிவினர், துப்புரவாளர்கள், ஊழியர்கள் மற்றும் வர்த்தக சந்தையில் பணி புரிபவர்கள் போன்றவர்களுக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
மேலும் இன்று விடுமுறை தினம் என்பதால், நாளை முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பமாகும் என எமது விசேட செய்தியாளர் தெரிவித்தார்.