தீவிர அரசியலில் ஈடுபட வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (09) எதிர்க்கட்சியிடம் கோரிக்கை விடுத்தார்.
மேலும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ சமீபத்தில் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையையும் ஜனாதிபதி விமர்சித்தார்.
$ads={2}
“ஆம், நான் நந்தசேன கோட்டாபய, இது ஒரு நல்ல பெயர் என நான் நினைக்கிறேன். எனக்கு இரு பக்கங்களும் உள்ளன. சில தேரர்கள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவாக இல்லாமல், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷனாக இருக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கிறார்கள், நான் இன்னும் கொஞ்சம் கடினமாக இருக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை முன்வைக்கிறார்கள், இந்த இரு கதாபாத்திரங்களில் ஒன்றைச் செயல்படுத்த நான் தயாராக இருக்கிறேன்." என்றார்.