
நாட்டில் முஸ்லிம்களின் உடல்களை தகனம் செய்பவர்கள் அனைவரும் ஒரு நாள் அதற்கு இழப்பீடு செலுத்த வேண்டியிருக்கும் என்று தேசிய ஒற்றுமை முன்னணியின் தலைவர் அசாத் சாலி கூறுகிறார்.
இழப்பீடு நிச்சயமாக எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
எனது மதத்தின்படி தகனம் செய்வது என்பது உயிருள்ள ஒருவரின் கை கால்களை உடைத்து தீ வைப்பது போன்றது என தெரிவித்தார்.
மனிதன் மண்ணால் உருவாக்கப்பட்டவர்கள், இறந்தபின்னர் உடல் மண்ணை உரமாக்க வேண்டும் என்பதே தனது மதம் கூறுவதாக தெரிவித்தார்.
தகனம் செய்வதை தனது மதம் தடைசெய்திருப்பதால் அதை எதிர்ப்பதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்
இன்று (05) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவற்றை தெரிவித்தார்.