கொரோனாவால் பாதிக்கப்பட்ட உடல்களை அடக்கம் செய்வதா அல்லது தகனம் செய்வதா என்பது குறித்து விஞ்ஞான ரீதியாக மட்டும் ஆராயப்படவில்லை என பேராசிரியர் நீலிகா மலவிகே தெரிவித்துள்ளார்.
$ads={2}
இது குறித்து தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
இலங்கையில் கொரோனாவில் மரணிக்கும் உடல்களை எரிப்பதா அல்லது அடக்கம் செய்வதா சம்பந்தமாக விஞ்ஞான ரீதியாக மட்டும் தீர்மானம் ஆராய்ந்து தீர்மானங்கள் எடுக்கப்படவில்லை, ஆதலால் இந் நேரத்தில் இது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்க மாட்டேன் என நேற்று (01) இடம்பெற்ற சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், இது தொடர்பாக பரிந்துரைகளை வழங்க அரசாங்கத்தால் புதிதாக நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் எதிர்காலத்தில் அரசாங்கத்தின் முடிவு அறிவிக்கப்படும் என்று அவர் கூறினார்.
கொரோனாவின் மரணிக்கும் உடல்களை அடக்கம் செய்வது தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட முதல் குழுவில் திருமதி நீலிகா மலவிகே உறுப்பினராக இருந்தமை குறிப்பிடத்தக்கது.