ஜகார்த்தா விமான நிலையத்தில் இருந்து கிளம்பிய இந்தோனேஷியாவை சேர்ந்த ஸ்ரீ விஜயா விமானம் ஒரு நிமிடத்துக்குள் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து விட்டது என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இலங்கை நேரப்படி இன்று (09) பிற்பகல் 12.40 மணியளவில் இந்த விமானம் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுள்ளது. அடுத்த சில நிமிடத்துக்குள் விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து விட்டது.
$ads={2}
காணாமல் போன இன்தோனேஷியா விமானத்தின் பாகங்கள் கடலில் கண்டுடிபிடிக்கப்பட்டுள்ள வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேஷியாவின் ஸ்ரீ விஜய விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானமே இவ்வாறு ஜகார்த்தா விமான நிலையத்தில் இருந்து போண்டியானாக் பகுதிக்கு புற்பபட்டு சென்றது. 11 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருதுந்த போது விமானம் குறித்த தகவல் ரேடாரில் பதிவாகவில்லை.
இந்த விமானத்தில் 182 பேர் பயணம் செய்துள்ள நிலையில், பெரியவர்கள் உட்பட 7 குழந்தைகள், மூன்று கைக்குழந்தைகள் மற்றும் விமான ஊழியர்கள் 6 பேர் பயணித்துள்ளதாக அந்நாட்டு விமான போக்குவரத்து அமைச்சகம் கூறியுள்ளது.
விமானம் தொடர்பு துண்டிக்கப்பட்ட இடத்தில் அவசர மற்றும் மீட்பு சேவையினர் பணியை தொடங்கியுள்ளனர். ஜகார்த்தா விரிகுடாவில் கடல் பகுதியில் விமான பாகங்களை குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.
$ads={2}
தற்போது மீட்புகுழுவினர் விமான பாகங்களை கண்டுபிடித்த வீடியோ இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் விமானத்தில் பயணித்தவர்களை தேடும் பணியில் குழுவினர்கள் ஈடுபட்டுள்ளனர்.
Video reportedly shows debris from Sriwijaya Air flight SJ182 after disappearing from radar on take off from Jakarta airport. Number of passengers and crew on board is currently unknown. https://t.co/LeQlvgiUHy pic.twitter.com/BhHSdFIsbz
— Breaking Aviation News & Videos (@breakingavnews) January 9, 2021