நாட்டின் தற்போதைய கிரிக்கெட் நிலை குறித்து அதிருப்தியை விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார்.
$ads={2}
"நாட்டில் கிரிக்கெட்டின் தற்போதைய நிலை திருப்திகரமாக இல்லை. இது குறித்து கிரிக்கெட் வாரியத்துடன் பேசியுள்ளேன். இருப்பினும், ஒரு டெஸ்ட் தொடரின் நடுவில் இது குறித்து மேலும் விவாதிப்பது நியாயமில்லை என்று நான் நினைக்கிறேன், ஏனெனில் இது வீரர்களின் மனநிலையை பாதிக்கிறது. இங்கிலாந்து சுற்றுப்பயணம் முடிந்ததும், இலங்கை கிரிக்கெட்டுடன் (SLC) கலந்துரையாடி சில கடினமான முடிவுகளை எடுக்க திட்டமிட்டுள்ளோம். ”
களுத்துறையில் நேற்று நிகழ்வொன்றில் கலந்துகொண்டு ஊடகங்களில் உரையாற்றும் போது விளையாட்டு அமைச்சர் இந்த கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.