இத்தாலியில் வைத்தியசாலை ஒன்றுக்கு அருகில் திடீரென ஏற்பட்ட பாரிய குழியினால் பல கார்கள் புதைந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நேப்பிள்ஸ் நகரிலுள்ள வைத்தியசாலையொன்றில் வாகனத் தரிப்பிடமொன்றில் கடந்த வெள்ளிக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றது.
$ads={2}
இக்குழியின் 66 அடியாக இருந்தாகவும் இக்குழியின் பரப்பளவு சுமார் 22,000 சதுர அடிகள் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இக்குழியில் பல கார்கள் புதைந்தபோதிலும் எவரும் காயமடையவில்லை. இக்குழியில் எவரும் சிக்கியுள்ளனரா என்பதை அறிவதற்கு தீயணைப்புப் படையினர் மோப்ப நாய்கள் சகிதம் தேடுதலில் ஈடுபட்டனர்.
இத்திடீர் குழிக்கு ஏற்பட்டமைக்கான காரணத்தை அறிவதற்கு தொழில்நுட்பக் குழுவொன்றை நீதவான் ஒருவர் நியமித்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவந்த 6 நோயாளிகள் இச்சம்பவத்தையடுத்து அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளனர்.