தனது மனைவி மெலனியா ட்ரம்ப் சகிதம் அமெரிக்க ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ ஹெலிகொப்டரான மரைன் வன் மூலம் அவர் வெள்ளை மாளிகையிலிருந்து புறப்பட்டார்.
$ads={2}
புளோரிடா மாநிலத்திலுள்ள தனது சட்டபூர்வ வாசஸ்தலத்துக்கு ஜனாதிபதி ட்ரம்ப் செல்லவுள்ளார்.
ஆமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் இன்று (20) பதவியேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. வொஷிங்டன் டிசியில் உள்ளூர் நேரப்படி நண்பகல் (இலங்கை நேரப்படி இரவு 10.30க்கு) ஜோ பைடன் பதவிப் பிரமாணம் செய்யவுள்ளார். உப ஜனாதிபதி கமலா ஹரிஸும் இன்று பதவிப்பிரமாணம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி ஜோ பைடனின் பதவியேற்பு விழாவில் தான் கலந்துகொள்ளப் போவதில்லை என டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சுமார் 130 வருடகாலத்தில் புதிய ஜனாபதியின் பதவியேற்பு நிகழ்விவை பதவியிலிருந்து அகலும் ஜனாதிபதியொருவர் தவிர்ப்பது இதுவே முதல் தடவையாகும். இதற்குமுன் 1869 ஆம் ஆண்டு ஜனாதிபதி கிராண்ட்டின் பதவியேற்பு விழாவை அன்ட்ரூ ஜோன்சன் தவிர்த்திருந்தார்.