
கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையான சுகாதார வழிகாட்டல்களைக் கணக்கில் கொள்ளாது, முகக்கவசம் அணியாமல் நடமாடுவோரைக் கைது செய்யும் நடவடிக்கைகள் நாளை (05) முதல் மேலும் தீவிரப்படுத்தப்படவுள்ளன.
$ads={2}
இதன்படி முகக் கவசம் அணியாதவர்கள் கைது செய்யப்படுமிடத்து, அவர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை மீறிய குற்றச்சாட்டில் வழக்கு பதிவு செய்யப்படுவதற்கு மேலதிகமாக, நாளை முதல் அவ்வாறானவர்கள் கட்டாய பிசிஆர் அல்லது ரெபிட் என்டிஜன் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவர் என பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன கூறினார்.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பனியகத்தில் இன்று (04) மாலை இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறினார்.