கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
$ads={2}
அத்துடன், நாளை (04) அதிகாலை 5.00 மணி முதல் குறித்த பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி கொழும்பு மாவட்டத்தின், மோதரை பொலிஸ் பிரிவு, வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதுக்கடை மேற்கு மற்றும் புதுக்கடை கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவுகள், பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வனாத்தமுல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவு, மிரிஹான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிடகோட்டே பிரதேசம் ஆகிய பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளன.
அத்துடன், கம்பஹா மாவட்டத்தின் பேலியகொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பேலியகொடவத்தை, மீகஹவத்தை ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள், பட்டிய வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவுக்குட்பட்ட ரோஹண விஹாரை மாவத்தை, பேலியகொடை கஹபட கிராம உத்தியோகத்தர் பிரிவுக்குட்பட்ட நெல்லிகஹவத்த மற்றும் பூரணகொட்டுவத்த ஆகிய பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளன.
மேலும், கம்பஹா மாவட்டத்தின் கிரிபத்கொடை பொலிஸ் பிரிவில் விலேகொட கிராம உத்தியோகத்தர் பிரிவுக்குட்பட்ட ஶ்ரீ ஜயந்தி மாவத்தை பிரதேசமும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளது.
$ads={1}
இதேவேளை, தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஏனைய பிரதேசங்கள் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.