சவூதி அரேபியாவில் உள்ள அல் உலா நகரில் இன்று (05) பிற்பகல் நடைபெற்ற கூட்டத்தில் வளைகுடா நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவர அல் உலா ஒற்றுமை ஒப்பந்தத்தில் வளைகுடா தலைவர்கள் கைச்சாத்திட்டனர்.
இந்த ஒப்பந்தத்தில், குவைத் அமீர் HH ஷேக் நவாப் அல் அஹ்மத் அல் ஜாபர் அல் சபா, சவூதி நாட்டின் பட்டத்து இளவரசர் HRH முகமது பின் சல்மான் பின் அப்துல் அஜிஸ் அல் சவூத், பஹ்ரைன் நாட்டின் பட்டத்து இளவரசர் HE சல்மான் பின் ஹமத் அல் கலீஃபா, அமீரக துணைத் தலைவரும், துபாய் ஆட்சியாளருமான HE ஷேக் முகமது பின் ரஷீத் மற்றும் ஓமன் துணைப் பிரதமர் HE பஹத் பின் மஹ்மூத் அல் சைத் ஆகியோருடன் கத்தார் அமீர் HH ஷேக் தமீம் பின் ஹமாத் அல்தானி அவர்களும் கையெழுத்திட்டார்.
$ads={2}
சவூதி அரேபியாவின் அல் உலா நகரில் நடைபெற்ற 41ஆவது வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் உச்சி மாநாட்டில் அல் உலா ஒப்பந்தம் கையெழுத்தானது.
மறைந்த ஓமன் சுல்தான் கபூஸ் பின் ஸைத் பின் தைமூர் மற்றும் குவைத் அமீர் ஷேக் சபா அல் அகமது அல் ஜாபர் அல் சபா ஆகிய இரு பெருந் தலைவர்களின் நினைவாக இந்த உச்சி மாநாடு சுல்தான் கபூஸ் ஷேக் சபா உச்சி மாநாடு என்று பெயரிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக சவூதி அரேபியா முன்னதாக கத்தார் உடனான வான்வெளி, நிலம் மற்றும் கடல் எல்லையை திறந்துள்ளது மற்றும் வருகின்ற நாட்களில் நெருக்கடியை முடிவுக்கு கொண்டு வருவதற்கான கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ஐக்கிய அமீரகம், பஹ்ரைன், எகிப்து போன்ற நாடுகளும் கத்தார் மீதான அனைத்து தடைகளையும் நீக்கப்பட்டு, இராஜதந்திர உறவுகளை முழுமையாக மீண்டும் தொடங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சவூதி வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

