
தேசிய கீதம் மொழி பெயர்க்கப்படுவதனை தடை செய்ய வேண்டுமென யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
புதிய அரசியல் அமைப்பு உருவாக்கும் நிபுணர் குழுவிடம் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
தேசிய கீதம் இனி வரும் காலங்களில் மொழி பெயர்க்கப்பட்டு இசைக்கப்படுவதனை அனுமதிக்கக் கூடாது என இந்த யோசனையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
$ads={2}
தாய் நாட்டை பாதுகாக்கும் தேசிய இயக்கத்தின் தலைவர் எல்லே குணவன்ச தேரரினால் இந்த யோசனைத் திட்டம் நேற்றைய தினம் (05) நிபுணர் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நாட்டின் இறைமைக்கும் பௌதீக ஒருமைப்பாட்டுக்கும் குந்தகம் ஏற்படுத்தும் வகையில் செயற்படுவோரின் சிவில் உரிமைகளை ரத்து செய்யும் வகையிலான சரத்து ஒன்றை புதிய அரசியல் அமைப்பில் உள்ளடக்க வேண்டுமெனவும் அவர் தனது பரிந்துரைகளில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் தேசிய கீதம் சிங்கள, தமிழ் மொழிகளில் பாடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.