
இந்திய கொரொனா தடுப்பூசி கடந்த 19ஆம் திகதி இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் ஊடாக இலங்கைக்கு கிடைத்துள்ளதாகவும் அந்த அதிகார சபையின் நிறைவேற்று அதிகாரி வைத்தியர் கமல் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
குறித்த தடுப்பூசியின் பக்கவிளைவுகள் மற்றும் ஏனைய விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
Oxford-AstraZeneca நிறுவனத்தினால் மேம்படுத்தப்பட்ட Covishield தடுப்பூசியை இந்தியாவின் பாரிய நிறுவனமான Serum Institute உற்பத்தி செய்கிறது.
இந்த தடுப்பூசியை இலங்கையில் பயன்படுத்துவதற்கு தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் அவசர அனுமதி பெறப்பட வேண்டும் என்பதுடன், அத்தகைய அனுமதியை பெறுவதற்கு அரசாங்கத்தின் பரிந்துரையும் தேவைப்படுகிறது.
பிரித்தானியா, மாலைத்தீவுகள், பங்களாதேஷ், நேபாளம், மியன்மார் மற்றும் சீஷெல்ஷ் உள்ளிட்ட ஆறு நாடுகளுக்கு தற்போது Covishield தடுப்பூசியை இந்தியா ஏற்றுமதி செய்கிறது குறிப்பிடத்தக்கது.