வாட்சப் புதிய விதிமுறை - சிக்னல் மற்றும் டெலிகிராம் செயலிகளுக்கு இலட்சக் கணக்கில் குவியும் பயனாளர்கள்!

வாட்சப் புதிய விதிமுறை - சிக்னல் மற்றும் டெலிகிராம் செயலிகளுக்கு இலட்சக் கணக்கில் குவியும் பயனாளர்கள்!

வாட்ஸாப் செயலியின் புதிய விதிமுறை அறிவிப்பைத் தொடர்ந்து இதுவரை 40 லட்சம் புதிய பதிவிறக்கங்களை சிக்னல் மற்றும் டெலிகிராம் பெற்றுள்ளது.

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் வாட்ஸாப் செயலி சமீபத்தில் அதன் பயன்பாட்டு விதிமுறைகளையும், தனியுரிமை கொள்கையையும் புதுப்பித்து வருகிறது. புதிய விதிமுறைகளை ஏற்றுக்கொண்டால் மட்டுமே தொடர்ந்து வாட்ஸாப் செயலியை பயன்படுத்த முடியும் என்று கூறி வருகிறது. இது வாட்ஸ்ஆப் பயனர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து பயனர்கள் வாட்ஸாப் செயலிக்கு மாற்றாக புதிய செயலியைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 


Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.


இதனிடையே 4 கோடி பின்தொடர்பவர்களைக் கொண்ட டெஸ்லா தலைவர் எலான் மஸ்க், வாட்ஸாப்புக்கு மாற்றாக 'சிக்னல்' செயலியை பயன்படுத்துமாறு கோரினார். இதையடுத்து சிக்னல் செயலி பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

சென்சார் டவர் தரவுகளின் படி ஜனவரி 6 முதல் ஜனவரி 10 வரை 23 லட்சம் புதிய பதிவிறக்கங்களுடன் சிக்னல் முதலிடத்திலும், டெலிகிராம் 15 லட்சம் பதிவிறக்கங்களுடன் உள்ளன. புதிய தரவுகளின்படி சிக்னல் 9,483 % வளர்ச்சியும், டெலிகிராம் 15% வளர்ச்சியும் அடைந்துள்ளது. 

இதே காலப்பகுதியில் வாட்ஸாப் செயலி 13 லட்சம் புதிய பதிவிறக்கங்களை மட்டுமே பெற்று 35% சரிந்துள்ளது.

Previous News Next News