நினைவுச்சின்னம் இடிக்கப்பட்ட மறுநாளே, கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து இந்த விவகாரம் குறித்து விவாதிக்க உள்ளதாக 'தி இந்து' செய்தித் தளத்தில் வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் ஊடக செயலாளரை மேற்கோள்காட்டி குறித்த செய்தித் தளம் இதை வெளியிட்டுள்ளது.
நினைவுச்சின்னம் இடிக்கப்படுவது தென்னிந்தியாவில் அமைதியின்மையை ஏற்படுத்தும் என்றும் உயர் ஸ்தானிகர் சுட்டிக்காட்டினார்.
அதன் பின்னரே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உடனடி நடவடிக்கை எடுத்ததாகவும், பின்னர் பல்கலைக்கழக துணைவேந்தர் வந்து நினைவுச்சின்னத்தின் புனரமைப்புக்கு அடிக்கல் நாட்டினார் என்றும் அந்த செய்தியில் தெரிவித்துள்ளது.