கண்டியில் போலி கிருமி தொற்று நீக்கி விற்பனை செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னணி கிருமி தொற்று நீக்கியொன்றின் பெயரைப் பயன்படுத்தி இந்த போலி கிருமித் தொற்று நீக்கி விற்பனை செய்யப்பட்டுள்ளது.
$ads={2}
கண்டி - அலிமுடுக்குவ எனும் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பு தேடுதலின் போது இந்த போலி கிருமி தொற்று நீக்கி போத்தல்கள் மீட்கப்பட்டுள்ளன.
விற்பனைக்காக கடையில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த மற்றும் விற்பனை செய்யப்பட்ட போலி கிருமி தொற்று நீக்கி போத்தல்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
போலியான அடிப்படையில் பிரபல கிருமித் தொற்று நீக்கி விற்பனை செய்யப்படுவதாக கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த போலி கிருமி தொற்று நீக்கி போத்தல்கள் நாடு முழுவதிலும் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.