இந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் சர்வதேச போதைப்பொருள் வலையமைப்புடன் தொடர்புடைய இரண்டு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தின் சென்னையிலேயே குறித்த இரண்டு பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் கூறுகின்றன.
கடந்த வருடம் நவம்பர் 27 ஆம் திகதி இலங்கையில் கைப்பற்றப்பட்ட 100 கிலோ கிரோம் ஹெரோயின் கடத்தலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் கேபிஎஸ் மல்ஹோத்ரா கூறியுள்ளார்.
குறித்த போதைப்பொருட்களின் மொத்த பெறுமதி ஆயிரம் கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் மற்றும் இலங்கையை தளமாகக் கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த போதைப்பொருள் கடத்தல் ஆப்கானிஸ்தான்,ஈரான்,மாலைதீவு மற்றும் அவுஸ்திரேலியா வரை முன்னெடுக்கப்பட்டுள்ளன.