போலி காணி உறுதிகளை தயாரித்து தலைமன்னார் பகுதியில் உள்ள காணி ஒன்றை விற்பனை செய்ய முற்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியூதீனின் சகோதரர் ரிப்கான் பதியூதீன் உள்ளிட்ட மூன்று சந்தேக நபர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தொடர்பான இரசாயன பரிசோதகரின் அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளதாக கொழும்பு பிரதான நீதவான் மொஹமட் மிஹார் இன்று நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
குறித்த வழக்கு இன்று (21) விசாரணைக்கு எடுத்துக் கொண்டு சந்தர்ப்பத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கையை மே மாதம் 6 ஆம் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
தலைமன்னார் பகுதியில் உள்ள 80 ஏக்கர் காணியை போலி உறுதி பத்திரங்களை தயாரித்து விற்பனை செய்தமை தொடர்பில் ரிப்கான் பதியூதீன் உள்ளிட்ட மூவக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.