தேசிய கண் வைத்தியசாலை விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தேசிய கண் வைத்தியசாலை விடுத்துள்ள விசேட அறிவிப்பு!


நாட்டில் கொரோனா அச்சம் அதிகரித்து வருவதனால், தேசிய கண் வைத்தியசாலையில் கண் பரிசோதனைகளுக்காக வருபவர்கள் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கண் பரிசோதனைக்காக அன்றாடம் அதிகளவான நோயாளிகள் தேசிய கண் வைத்தியசாலைக்கு வருகை தருகின்றனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.


$ads={2}


இதனால் கொரோனா பரவுவதற்கான வாய்ப்பு அதிகம் என்பதால், நோயாளிகள் வைத்தியசாலைக்கு வருகை தரும் நேரத்தினை முன்பதிவு செய்துகொள்வதற்காக புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


0117682741, 0117 682554, 0117682558 மற்றும் 0117898301 ஆகிய தொலைபேசி இலக்கங்களே முன்பதிவுகளுக்காக அறிமுகப்பட்டுத்தப்பட்டுள்ளது.


மேலும் அங்குள்ள பணியாளர்கள் 6  பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


தாதியர்கள் இருவர், அலுவலக பணியாளர்கள் இருவர், பாதுகாப்பு அதிகாரி  மற்றும் வைத்தியசாலை சமையலறையின் உணவு தயாரிப்பாளர் என 6 பேர் இவ்வாறு தொற்றுக்குள்ளானமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


இதன் காரணமாக  வைத்தியசாலையில் அலுவலக  பணியாளர்கள் 30 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


அத்துடன் குறித்த தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்களை அடையாளங்காணும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு அவர்களை தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்கு உட்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார தரப்பினர் தெரிவிக்கின்றனர்.


மேலும் வைத்தியசாலையில் தொற்று நீக்கும் நடவடிக்கை  மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.