
$ads={2}
சமீப காலங்களில் பல தேரர்களின் மர்மமான முறையிலான உயிரிழந்துள்ளனர் என்பதை சுட்டிக்காட்டிய சஜித் பிரேமதாச, புத்த சாசனத்தை பாதுகாப்பதாக உறுதியளித்து ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கத்தினால் தேரர்களின் உயிரைக் கூட காப்பாற்ற முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் இவ்வாறு தேரர்கள் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நினைவு கூர்ந்த சஜித் பிரேமதாச இன்று பாராளுமன்றத்தில் வேண்டுகோள் விடுத்து இது தொடர்பான தெளிவான அறிக்கை ஒன்றை அரசாங்ககம் வெளியிடும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்திருந்தார்.