நாட்டின் தென்கிழக்கு பிராந்திய வளிமண்டலத்திற்கு கீழாக ஏற்பட்டுள்ள தழம்பல் நிலைமைக் காரணமாக, அடுத்து வரும் நாட்களில் மழையுடனான வானிலை அதிகரிக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
$ads={2}
அத்துடன், வடக்கு, வட மத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், நாட்டின் ஏனைய சில மாகாணங்களில் பிற்பகல் வேளையில், 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
எனவே இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, பதுளை மாவட்டத்தின் உல்ஹிட்டிய நீர்த்தேகத்தின் 7 வான்கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன.
இதனாலை, பதுளை மாவட்டத்தின் தெல்தனியாய, ரொட்டலவெல மற்றும் உல்ஹிட்டிய ஆகிய பிரதேசங்களை சேர்ந்த மக்கள் மிகவும் அவதானமாக செயற்படுமாறும் அறிவுறுத்தல் விடுக்க்பட்டுள்ளது.
அத்துடன், தாழ்நில பிரதேசங்களில் உள்ள மக்களை வெள்ள அனர்த்தம் குறித்து அவதானமான எச்சரிக்கையாக இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை, மட்டக்களப்பு உன்னிச்சை குளத்தின் மூன்று வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
கிழக்கு மாகாணத்தில் நேற்று பெய்த கன மழைக் காரணமாக உன்னிச்சை குளத்தின் நீர்மட்டம் அதிகரித்ததன் காரணமாகவே இவ்வாறு வான்கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன.
இதனால், உன்னிச்சை குளத்தின் தாழ்நில பகுதிகளை சேர்ந்த மக்களை எச்சரிக்கையாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.