File Photo |
யாழ். நகரை அண்டிய காக்கை தீவு பகுதியில் உள்ள திண்மக் கழிவகற்றும் வளாகத்தை சூழவுள்ள பகுதிகளில், இரவு வேளைகளில் வாகனங்களில் கழிவுகளை எடுத்து வந்து வீதியோரமாக பலர் வீசி செல்கின்றனர்.
அதனால் அப்பகுதி மக்கள் சுகாதார சீர்கேடுகளுக்கு மத்தியில் வாழ்வதுடன் , அவ்வீதி வழியாக செல்வோரும் பெரும் இடர்களை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று (21) ஊரவர்கள் இரவு வேளைகளில் கழிவுகளை வீசி செல்பவர்களை மடக்கிப் பிடிக்க ஒன்று கூடி காத்திருந்தனர்.
இதன்போதே வாகனம் ஒன்றில் கழிவுகளை ஏற்றி வந்த இருவர் அப்பகுதியில் கழிவுகளை வீசியபோது பொதுமக்கள் அவர்களைப் மடக்கி பிடித்தனர்.
$ads={2}
அதனையுடுத்து வாகனத்தையும் அதில் வந்த இருவரையும் பொலிஸ் நிலையம் கொண்டு சென்ற பொலிஸார் இருவருக்கும் எதிராக வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.