திருகோணமலைக்கு அருகில் உள்ள சின்ன இராவணா கோட்டை கடற்பரப்பில் லைபீரிய கொடியின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள MV Eurosun எனும் பெயர் கொண்ட வணிகக் கப்பல் ஒன்று விபத்துக்கு உள்ளாகி உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கப்பலுக்கு உதவுவதற்காக இலங்கை இராணுவத்தை சேர்ந்த இரண்டு கடற்படைக் கப்பல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கப்டன் இந்திக டி சில்வா தெரிவித்துள்ளார்.
கடந்த 08ஆம் திகதி அபுதாபியிலிருந்து புறப்பட்டு திருகோணமலைத் துறைமுகத்துக்குச் சென்றுகொண்டிருந்த கப்பலே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த கப்பல் சிமெந்து ஏற்றி வந்ததாகவும் தெரியவருகிறது.