
கம்பஹா பகுதியில் வீடொன்றிலிருந்து தம்பதியினர் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக கம்பஹா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
கம்பஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீடொன்றில் தம்பதியினர் சடலமாக இருப்பதாக இன்று (21) பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
$ads={2}
சியம்பலாபிட்டியகே தொன் செல்டன் அலெக்சன்ரா (60) என்பவரும் அவருடைய மனைவியான பரகஹகொட லியனகே துஷாரி பிரியங்கிகா (50) ஆகிய இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
இதன்போது பெண்ணின் சடலத்தின் கழுத்து பகுதி கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நிலையில் காயமொன்று காணப்பட்டுள்ளதுடன், அவருடைய கணவர் தூக்கிட்டு உயிரிழந்த நிலையிலேயே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக கம்பஹா வைத்தியசாலைக்கு எடுத்துச் செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் இருவருக்கிடையில் அடிக்கடி முரண்பாடுகள் ஏற்படுவதால், கணவர் அவரது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிவிட்டு தூக்கிட்டு தற்கொலைச் செய்துக் கொண்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
எனினும் அது தொடர்பில் உறுதியாக கூறமுடியாது என்றும் தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்களின் மகள் கொழும்பில் தொழில் புரிந்து வருவதுடன் சம்பவத்தின் போது அவர் வீட்டில் இல்லை என்றும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.