![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhAgRAIXFXI9o-l53y4nVdg-ffVIxFz7RxkyOHyrudqgtJUN4CZyhQ_kYWY9nYSt5AHkGqmOlv66H44-KH7Hah2Ealc-3PuQnW0qB_LyOYvxLQJB8GJ3mtTcMwxuF7CwMVMdUKLUpJJW_8/s16000/ranil-wickremesinghe-and-sajith-premadasa.jpg)
ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் ரவி கருணநாயக்கவிற்கு பதிலாக அகில விராஜ் காரியவசம் கட்சியின் உதவித் தலைவராக நியமிக்கப்பட்டார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியை ரவி கருணநாயக்க மற்றும் நவீன் திஸாநாயக்க ஆகியோர் கடுமையாக விமர்சித்தனர்.
இந்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்துடன் ஏற்பட்டுள்ள விரிசல் காரணமாக குறித்த இருவரும் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைவது தொடர்பில் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சியின் பொது செயலாளராக வருவதற்கு ரவி கருணநாயக்க விருப்பம் தெரிவித்திருந்த போதிலும், கட்சி தலைமையிடம் இருந்து சாதகமான பதில் எதுவும் வரவில்லை.
எவ்வாறாயினும், அண்மையில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் பாலித ரங்கே பண்டார பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
அத்துடன், ரணில் விக்கிரமசிங்க விசுவாசிகள் உயர் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டனர்” என அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.