![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgcbgkBragJDRzK2O72Z4gy6sEArCzap24EDlNkpVVLp0QUQXcKAF-fxyzbTwxDHQSd0o8pFD-gVdqVdhXX3MafrzJTq7b4EmvE8zvPLra3WZGQyJ7tKDl0w-oyYqQ9srr4X44sscomugk/s16000/powerlines-620x360.jpg)
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, கடந்த ஆண்டில் பெரும்பாலான அலுவலகங்கள் மூடப்பட்டிருந்த நிலையில், மின்சாரத்துக்கான தேவை குறைவாகக் காணப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த ஆண்டில் நாட்டின் அனைத்து துறைகளும் படிப்படியாக ஆரம்பிக்கப்பட்டு வரும் நிலையில், மின்சாரத்தின் தேவை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், எதிர்வரும் பெப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நிலவக்கூடிய வெப்பமான காலநிலையும் மின்சார நுகர்வை அதிகரிக்கும் ஒரு காரணியாக காணப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், இந்த ஆண்டுக்கான மின் உற்பத்தியை திட்டமிட எதிர்பார்த்துள்ளதாகவும், மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.