2020 ஆம் ஆண்டு தரம் 1 மாணவர்களுக்காக விநியோகிக்கப்பட்ட சீருடைகளுக்கான வவுச்சர்களுக்குரிய காலாவதி திகதி பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றினால் பாடசாலைகள் மூடப்பட்டிருந்தமை, முடக்கல் நிலை அறிவிக்கப்பட்டமை, வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்தமையால் பாடசாலை சீருடைகளை பெற்றுக்கொள்ள முடியாமற்போயுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த விடயங்களை கருத்திற்கொண்டு சீருடைகளுக்கான வவுச்சர்களின் காலாவதி திகதியை நீடிக்க தீர்மானித்ததாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.