
யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை தவிர்ந்து வேறு எந்த தூபியும் அமைக்க இடமளிக்க முடியாதென யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு மாணவர் ஒன்றியத்தின் தலைவர் அனுசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
$ads={2}
முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அல்லாமல் பொதுவான சமாதானத் தூபி ஒன்றினை அமைப்பதக்கு நடவடிக்கை முன்னெடுக்கபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில், அந்த தகவலில் உள்ளதை போன்று மாற்று நோக்கத்திலான தூபிகள் அமைக்கப்படவில்லை எனவும், மாற்று தூபிகள் அமைப்பதற்கு அனுமதிக்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, அடிக்கல் நாட்டப்பட்டுள்ள இடத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூயே அமைக்கப்படுமெனவும் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.