இந்த வருடமும் மக்கள் கொரோனா வைரசுடன் வாழ வேண்டியிருக்கும் என பொது சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
பொலனறுவை வைத்தியாசாலைக்கு விஜயம் மேற்கொண்டவேளை அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
$ads={2}
கொரோனா வைரஸ் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது நிச்சயமாக தெரியாததன் காரணமாக இந்த வருடமும் மக்கள் கொரோனவுடன் வாழவேண்டியிருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனாவிற்கு மத்தியிலும் நாங்கள் எங்கள் நாளாந்த நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியிருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெரும்செலவில் நாளாந்தம் PCR சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.