யாழ் பல்கலைகழகத்தில் காணப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூபி நேற்று முன்தினம் இரவோடு இரவாக இடித்து அழிக்கப்பட்ட சம்வத்தை கண்டித்து நாளை (10) வடக்கு கிழக்கு மாகாணங்களில் பூரண கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வழைப்பை நேற்று கிளிநொச்சியில் வைத்து யாழ் பல்கலைகழக மாணவர் அமைப்பு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் கூட்டணி ஆகிய கட்சிகளும், வடக்கு கிழக்கு சிவில் அமைப்புகள், காணாமல்
ஆக்கப்பட்டவர்களின் அமைப்பு அனைவரும் ஒன்றாக விடுத்துள்ளனர்.
யாழ் பல்கலைகழகத்தில் நிறுவப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபியானது இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட அப்பாவி பொது மக்களின் நினைவாக
அமைக்கப்பட்டிருந்தது.
இதனை அரசின் கட்டளைக்கு அமைவாக யாழ் பல்கலைகழக துணைவேந்தரின் ஒத்துழைப்புடன் இரவோடு இரவாக இடித்து அழிக்கப்பட்ட விடயத்திற்கு மேற்படி தரப்புக்கள் அனைவரும் தங்களின் கடுமையான கண்டனத்தை
வெளியிட்டிருந்தனர்.