சவூதி அரேபியா தனது எல்லைககளை இன்று (03) மீளத் திறந்துள்ளதுடன் சர்வதேச விமானங்களின் வருகைக்கு மீள அனுமதி அளித்துள்ளது.
புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 21ஆம் திகதி முதல் சர்வதேச விமானங்களுக்கு சவூதி அரேபியா தடை விதிக்கப்பட்டதுடன் வெளிநாடுகளுக்கான தரை வழியான போக்குவரத்துகளும் இடைநிறுத்தப்பட்டன.
$ads={2}
இந்நிலையில், இன்று முதல் சவூதி அரேபியாவுக்கான சர்வதேச விமானங்களுக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
புதிய வகை கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டிருந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நீக்குவதற்கு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது என சவூதி அரேபிய உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சவூதி அரேபியாவில் 360,000 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், அவர்களில் 6,200 பேர் இறந்துள்ளனர்.