இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்தவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
அமைச்சர் ரேப்பிட் அண்டிஜன் சோதனையை மேற்கொண்ட போது அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனை அடுத்து அமைச்சரின் உதவியாளர்கள் உட்பட 10 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
பாராளுமன்றத்தில் தயாசிறி ஜயசேகர, ரவூப் ஹக்கீம், வாசுதேவ நாணயக்கார ஆகியோருக்கு ஏற்கனவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஹொரனவில் அண்மையில் டயர் உற்பத்தி ஆலை திறப்பு விழாவில் அமைச்சர் நிஷாந்த கலந்து கொண்டதாக கூறப்படுகிறது, இதில் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவும் கலந்து கொண்டார்.
அவர் இரண்டு நாட்களுக்கு முன்பு கேகாலையில் அரசு பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பிலும் கலந்து கொண்டார்.
பாராளுமன்றத்தில் வைத்து கேகாலையில் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவ பயிற்சியாளர் தம்மிக பண்டாரா தயாரித்த ஆயுர்வேத கொரொனா தடுப்பு பாணியையும் உட்கொண்டவராவார்.