
யாழ் பல்கலைகழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிக்கப்பட்டமைக்கு யாழ் முஸ்லிம் இளைஞர் கழகம் கண்டனம் வெளியிட்டுள்ளதுடன் நாளை (11) இடம்பெறவுள்ள ஹர்த்தாலுக்கு தனது ஆதரவை வெளியிட்டுள்ளது.
$ads={2}
உயிரிழந்த உறவுகளை நினைவு கூறுவதற்காக அமைக்கப்பட்டிருந்த நினைவுத்தூபியை அகற்றியமையினால் உறவுகளை இழந்து வாழும் சகோதா உறவுகளின் மனங்கள் எவ்வளவு கவலையடைந்திருக்கும் என்பதை நாம் அறிவோம் என யாழ் முஸ்லீம் இளைஞர் கழகம் அவ்உறவுகளின் துயரத்தில் முஸ்லீம் மக்களாகிய நாம் பங்கெடுத்துக்கொள்ள விரும்புகின்றோம் எனவும் தெரிவித்துள்ளது.
