இலங்கைக்கு பொருத்தமான கொரோனா மருந்து எது என்பது குறித்தும் அதனை எப்போது கொண்டுவரவேண்டும் என்பது குறித்தும் சுகாதார அமைச்சு இன்று (04) தீர்மானமொன்றை எடுக்கவுள்ளது.
தேசிய தடுப்பு மருந்து திட்டத்தினை ஆராய்ந்த பின்னர் சுகாதார அமைச்சு பொருத்தமான மருந்து குறித்த தீர்மானத்தினை எடுக்கவுள்ளது.
$ads={2}
சுகாதார அமைச்சு தேசிய தடுப்பு மருந்து திட்டம் நாளை கொரோனா மருந்து தொடர்பான கண்காணிக்கும் தேசிய குழுவிடம் நாளை கையளிக்கப்படும் என குழுவின் தலைவரும் ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகருமான லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் பட்டியலில் உள்ள அனைத்து மருந்துகள் குறித்து இலங்கை ஆராய்கின்றது என லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.
தற்போது நாங்கள் பல தொடர்புகளை உருவாக்கி வருகின்றோம் நாங்கள் இது தொடர்பில் ஜனாதிபதி செயலணியொன்றை அமைக்க கூடும், நாங்கள் அனைத்து அமைச்சுகள் உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் எங்களிற்கு உதவக்கூடிய தூதரகங்களுடன் இணைந்து பணியாற்றி வருகின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் கொரோனா வைரஸ் மருந்தினை கொண்டுவருவதற்கான திகதி இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை எனவும் லலித்வீரதுங்க தெரிவித்துள்ளார்.