ஹட்டன் பகுதியில் பாடசாலை ஒன்றில் கற்கும் 14 வயது மாணவர் ஒருவர் பாடசாலை நேரத்தில் மயக்கமுற்றதால் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் சோதனையில் கொரோனா தொற்றிருப்பது உறுதியானது.
இதேவேளை வகுப்பிலுள்ள 37 மாணவர்கள் மற்றும் 14 ஆசிரியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பாடசாலை வளாகம் கிருமித் தொற்று நீக்கம் செய்யப்பட்டதாகவும் அப்பகுதிக்குப் பொறுப்பான பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
மேலும் குறித்த மாணவரின் தாயாருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் சோதனையிலும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
-சி.எல்.சிசில்