
குறித்த குழுவில் தொடர்ந்து விசாரணைகள் மற்றும் அதன் நிறுவனர் ஜாக் மாவின் எதிர்காலம் தொடர்பான கேள்விகளுக்கு மத்தியில் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.
$ads={2}
“செயல்திட்ட மாற்றங்கள் காரணமாக ‘சியாமி மியூசிக்’ இன் தள சேவைகள் பிப்ரவரி 05 ஆம் திகதி முற்றிலுமாக நிறுத்தப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்திருந்தது. சியாமி மியூசிக் 2008 இல் தொடங்கப்பட்டது, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அலிபாபா நிறுவனம் இதனை கையகப்படுத்தியது.
அலிபாபா ஒரு இணையவழி வணிக நிறுவனமாக மட்டுமில்லாமல் நிதி சேவைகளையும் வழங்கி வருகிறது. இது தற்போது கட்டுப்பாட்டாளர்களால் கண்காணிப்பின் கீழ் உள்ளது. இப்போது சியாமி மியூசிக் தளம் முடக்கப்படுவதை தொடர்ந்து அலிபாபா நிறுவனம் மேலும் மறுசீரமைக்கப்படுமா எனும் குழப்பம் எழுந்துள்ளது என்று 'தி இந்து' செய்தி வெளியிட்டுள்ளது.
அலிபாபாவின் ‘Ant Group’ எனும் குழுமத்தின் பங்கு வெளியீடு திட்டத்தின் (initial public offering) போது அந்நிறுவனத்திற்கு இந்தச் சிக்கல் தொடங்கியது. ‘Ant Group’ என்பது அலிபாபாவின் நிதி நிறுவனமாகும், இது சீனாவின் மிகப்பெரிய டிஜிட்டல் பண பரிமாற்று நிறுவனமும் கூட; பங்கு வெளியீடு திட்டம் 35 பில்லியன் டாலர் திரட்ட வாய்ப்புள்ளது என்றும் இது ஒரு உலக சாதனை படைக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இது நவம்பர் மாத தொடக்கத்தில் கட்டுப்பாட்டாளர்களால் நீக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஷாங்காயில் ஜாக் மா ஒரு உயர் பொருளாதார மாநாட்டில் உரையாற்றினார். ஜாக் மாவின் குழுமம் நிதி துறையில் நுழைந்ததற்கு பிறகு அரசு நடத்தும் வங்கிகளின் ஏகபோக உரிமை பாதிக்கப்பட்டது. எனவே அவரது இந்தப் பேச்சு கட்டுப்பாட்டாளர்களை கோபப்படுத்தியதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
டிசம்பர் 24ஆம் தேதி, சந்தை ஒழுங்குபடுத்தல் நிர்வாகம் அலிபாபா நிறுவனத்தின் ‘ஏகபோக உரிமை’ குறித்து விசாரிக்கப்படும் என்று கூறியது. அது “வணிகர்களை இரண்டு தளங்களில் ஒன்றை தேர்ந்தெடுக்க வற்புறுத்துவது” குறித்தும் விசாரிக்கப்படும் என்று கூறியது.