கண்டி – பூவெலிகட பகுதியிலுள்ள ஐந்து மாடி கட்டடம் ஒன்று தாழிறங்கியமை தொடர்பில் தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் இறுதி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
$ads={2}
குறித்த கட்டடம் உரிய தரத்தில் அமைக்கப்படாமையே இந்த அனர்த்தத்திற்கான காரணம் அன்றி, நிலத்தில் எவ்வித பிரச்சினையும் இல்லை என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 20 ஆம் திகதி கண்டி – பூவெலிகட பகுதியில் ஐந்து மாடி கட்டடம் இடிந்து வீழ்ந்ததில், குழந்தையொன்று உட்பட மூவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.