நடைபெற்று முடிந்த 2020ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் ஏப்ரல் மாதம் வெளியிட எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
$ads={2}
பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், தகுதிபெற்ற மாணவர்கள் செப்டெம்பர் மாதமளவில் பல்கலைக்கழகங்களுக்கு உள்ளீர்க்கப்படுவார்கள் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இம்முறை க.பொ.த சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்காக, மேல் மாகாண பாடசாலைகளை இம்மாதம் 25 ஆம் திகதி திறக்க தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.