இலங்கையில் இன்றைய தினம் கொரோனா தொற்றினால் மரணித்தவர்கள் எண்ணிக்கை சடுதியாக உயர்ந்துள்ளது. அதன்படி இன்றைய தினம் மேலும் 08 மரணங்கள் பதிவாகியுள்ளன.
இதனையடுத்து இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 264 ஆக அதிகரித்தது.
1. கொலன்னாவை பகுதியை சேர்ந்த 63 வயது பெண்ணொருவர். ஜனவரி 13 ஆம் திகதி மரணம்.
2. பொரளை பகுதியை சேர்ந்த 75 வயது ஆணொருவர். ஜனவரி 14 ஆம் திகதி மரணம்.
3. உடப்புசல்லாவ பகுதியை சேர்ந்த 27 வயது ஆணொருவர். ஜனவரி 15 ஆம் திகதி மரணம்.
4. கேகாலை பகுதியை சேர்ந்த 87 வயது ஆணொருவர். ஜனவரி 16 ஆம் திகதி மரணம்.
5. தெஹிவளை பகுதியை சேர்ந்த 72 வயது ஆணொருவர். ஜனவரி 16 ஆம் திகதி மரணம்.
6. பொலன்னறுவை பகுதியை சேர்ந்த 66 வயது ஆணொருவர். ஜனவரி 17 ஆம் திகதி மரணம்.
7. கொழும்பு 08ஐ சேர்ந்த 66 வயது ஆணொருவர். ஜனவரி 17 ஆம் திகதி மரணம்.
8. உடதும்பறை பகுதியை சேர்ந்த 75 வயது ஆணொருவர். ஜனவரி 17 ஆம் திகதி மரணம்.
அதேநேரம் இன்றைய தினம் புதிதாக மேலும் 749 பேர் தொற்றுக்கு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.