சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவினால் இலங்கையில் கொரோனா தொற்று ஆபத்தான சிவப்பு வலயம் பற்றிய புதிய வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது.
இம்மாதம் 12ஆம் திகதியுடன் முடிந்த 14 நாட்களின் தரவின் அடிப்படையில் இந்த வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது.
அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளிகள், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள், சுகாதார பிரிவினரின் தரவுகளின் அடிப்படையில் இந்த வரைபடத்தை தொற்றுநோயியல் பிரிவு வெளியிட்டுள்ளது.