கேகாலை சுகாதார அலுவலகப் பிரதேசத்தில் 11 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும், தம்மிக பானம் அருந்திய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று நபர்கள் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.
நேற்று முன்தினம் கேகாலை பொது மருத்துவமனையில் குறித்த குடும்ப உறுப்பினர்கள் மீது பி.சி.ஆர் மேற்கொள்ளப்பட்டதுடன், தொற்றுக்கு இலக்காகி இருப்பது உறுதிபடுத்தப்பட்டது.
$ads={2}
தங்களுக்கு வழங்கப்பட்ட தம்மிக பானத்தினை சரியான அளவில் உட்கொண்டதாக தொற்றாளர்கள் சுகாதார அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளனர்.
(அருண பத்திரிகை)