
சுற்றுச்சூழல் பிரச்சினை சுற்றுச்சூழலால் உருவாக்கப்படவில்லை, ஆனால் இது சமூக-பொருளாதார முறையால் உருவாக்கப்பட்டது. இதனை வாசிப்பதினூடாக நாட்டில் நிகழ்ந்த சுற்றுச்சூழல் அழிவை நாம் அறிந்துக்கொள்ள முடியும். கொரோனா அச்சுறுத்தல் இயற்கையுடனான ஒப்பந்தத்தின் தன்மையை மீண்டும் நமக்கு நினைவூட்டினாலும், அது நாட்டில் குறைய ஆரம்பித்ததும் ஒரு பெரிய காடழிப்பு ஏற்படத் தொடங்கியது.
சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை ஆய்வுகள் மையத்தினால் தற்போது கடந்த ஜனவரி மாதம் முதல் டிசம்பர் 31 வரையான காலப்படுத்தியில் ஆண்டில் ஒவ்வொரு நாளும் இலங்கை பொது காடுகளில் ஒரு நாளுக்கு பத்து ஏக்கருக்கும் அதிகமாக இழந்து வருவதாக மதிப்பிடுகிறது. அது காடுகளுக்கு நெருப்பு வைத்தல், தனியார் உரிமைக்கு காடுகளை வழங்குதல், முழு காடழிப்பு செயல்பாட்டில் ஆகும்.
5/2001, 5/1998, 2/2006 போன்ற மீதமுள்ள காடுகளின் பாதுகாப்பிற்கான சுற்றறிக்கைகளை அகற்றி 01/2020 சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. சுற்றறிக்கைகளை ஒழித்தல், சுற்றுச்சூழல் மதிப்பீட்டு அறிக்கைகள் இல்லாமல் மேம்பாட்டுத் திட்டங்களைத் தொடங்குவது, அரசியல் நோக்கங்களுக்காக காடுகளை தனியார்மயமாக்குதல் ஆகியவை கடந்த ஆண்டில் காணப்பட்டன.
வளர்ச்சி அடிப்படையிலான செழிப்பு என்ற பார்வையின் கருப்பொருளை முன்னிலைப்படுத்தி இலங்கையின் இயற்கை சூழலை அழித்தல் மற்றும் சுற்றுச்சூழல் சட்டத்தின் மீறல்கள் கடந்த ஒரு வருடமாக அதிகரித்து வருகின்றன.
கடந்த ஆண்டு இலங்கை வரலாற்றில் மனித-யானை மோதலால் வரலாற்றில் இல்லாத அளவிற்கு யானைகள் உயிரிழந்தது. கடந்த 2019ம் ஆண்டு 407 யானைகள் உயிரிழந்தன. யானைகளின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த மனிதர்களின் எண்ணிக்கை 122. துப்பாக்கிச் சூடு மற்றும் விஷத்தால் யானைகள் கொல்லப்பட்டன. 2020 ஆம் ஆண்டில் 317 க்கும் மேற்பட்ட யானை இறப்புகள் பதிவாகியுள்ளன, 2021 ஆம் ஆண்டில் முதல் யானை மரணம் உவ பரணகமவில் பதிவாகியுள்ளது.
இதற்கமைய யானைகளை கொலை செய்யும் மற்றும் யானைகள் உயிரிழப்புக்கள் அதிகளவாக பதிவான நாடாக உலகில் முதல் இடத்தை இலங்கை பிடித்துள்ளது. இது சுப்புன் லஹிரு பிரகாஷ் மற்றும் டாக்டர் பிருதிவிராஜ் பெர்னாண்டோ ஆகியோரால் ஒரு ஆய்வுக் கட்டுரையாக வெளியிடப்பட்டது, இந்த விவகாரம் State Accounts Committee யின் கவனத்திற்கும் கொண்டு வரப்பட்டது.
சிங்கராஜா போன்ற உலக பாரம்பரிய காடுகளை அழித்து சாலைகள் அமைத்தல் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகள், சிவனொளிபாதமலை, நகல்ஸ், ஹோட்டன் சமவெளி போன்ற பகுதிகளில் சட்டவிரோத காடழிப்பு மற்றும் பாரிய சுற்றுச்சூழல் பேரழிவுகளை நாம் காணக்கூடிய ஆண்டு 2020.
கொழும்புக்கு நீர் வழங்கும் களனி ஆற்றின் நீரின் தரம் மார்ச் மாதம் முதல் பல மாதங்கள் வரை நன்றாகவே இருந்தது. இருப்பினும் லொக்டவுன் காலம் நீக்கப்பட்டதும் மீண்டும் ஒரு மாத காலத்திற்குள் அசுத்தமாக மாறியது.
கொரோனா நெருக்கடியிலிருந்து கற்றுக்கொள்வதற்கு பதிலாக, நவோமி க்ளீனின் கூற்றுப்படி, இலங்கையில் நெருக்கடி சாதகமாக பயன்படுத்தப்பட்டதுடன், லொக்டவுன் காலத்திலும் அதற்குப் பின்னரும், 2020 ஆம் ஆண்டு முழுக்க வில்பத்து, ஆணைவிழுந்தான், எதாவெடுனுவெவ, நில்கல, ரெகவ களப்பு, வவுனியா மாமடுவை, ரம்பகன் ஓயா, கல் ஓயா, வெள்ள பள்ளத்தாக்கு, கல்வலயாய உள்ளிட்ட 25 இடங்களில் காடழிக்கப்பட்டுள்ளன.