
இலங்கையின் கொழும்பில் அமைந்துள்ள கத்தார் விசா மையத்தை விசா செயற்பாடுகளுக்காக நாளை 13ஆம் திகதி மீண்டும் திறக்கவுள்ளதாக கத்தார் உள்துறை அமைச்சகம் (MoI) அறிவித்துள்ளது.
$ads={2}
இலங்கைக்கான கத்தார் விசா மையங்களைப் அணுக நியமன முன்பதிவு நாளை திறக்கப்படும், மேலும் சேவையை QVC இணையதளம் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தனது சமூக ஊடக வலையமைப்புகளில் குறித்த அமைச்சகம் அறிவித்துள்ளது.
முன்னதாக இந்தியா, நேபாளம், பாகிஸ்தான் மற்றும் பிலிப்பைன்ஸில் விசா மையங்களை கத்தார் திறந்தது. மேலும் QVC சமீபத்தில் பங்களாதேஷ் வீட்டுப் பணியாளர்களுக்கான விசா விண்ணப்பங்களையும் பெறத் தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.