மேல் மாகாணத்தில் கல்வி நடவடிக்கைகள் பெப்ரவரி 15ஆம் திகதிக்கு முன்னர் முழுமையாக ஆரம்பமாகும் என கல்வியமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் நிலவரம் ஒவ்வொரு பகுதியிலும் வேறுபட்டதாக காணப்படும் ஒவ்வொரு நகரத்திலும் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்த கருத்தினை பெறும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பெறப்படும் கருத்துக்கள் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேல் மாகாணத்தின் அனைத்து பாடசாலைகளையும் ஒரேநேரத்தில் ஆரம்பிக்க முடியாது என்பதால் படிப்படியாக பாடசாலைகளை ஆரம்பிக்கவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். மேல் மாகாணத்தில் உள்ள 1,576 பாடசாலைகளில் 900 பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான திட்டமுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.